பிரிண்டிங் பிரஸ் ஊழியர் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவர்கள் பீடி கேட்ட போது விரட்டியதால், போதையில் சிறுவர்கள் ஆத்திரம்..!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் பிரிண்டிங் பிரஸ் ஊழியர் தலையில் கல்லை போட்டு கொன்ற இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
TPR Murder
TPR Murder
Published on: 

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் பிரிண்டிங் பிரஸ் ஊழியர் தலையில் கல்லை போட்டு கொன்ற இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். சாலையில் நின்றிருந்த பாண்டியன் என்பவரிடம் மது போதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் பீடி கேட்ட போது, அவர்களை திட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் பாண்டியனின் தலையில் ஹாலோ பிளாக் கல்லைப் போட்டு தாக்கிவிட்டு சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

newstamil.tv