Ranipet theemithi thiruvizha
மாவட்ட செய்திகள்
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா அக்னி வசந்த தீமிதி திருவிழா வெகு விமரிசை..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திரௌபதி அம்மன் கோவிலில், 137-ஆம் ஆண்டு அக்னி வசந்த தீமிதி திருவிழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திரௌபதி அம்மன் கோவிலில், 137-ஆம் ஆண்டு அக்னி வசந்த தீமிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 16 நாட்களாக காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டு வந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட பூங்கரகத்தை தலையில் சுமந்தபடி குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
