Kanchipuram
Kanchipuram

தார் பிளாண்ட் தொழிற்சாலையில் தீவிபத்து... திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்த தார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தார் பிளாண்ட் தொழிற்சாலையில் தீப்பற்றி தார் மளமளவென எரிந்து வானளவு கரும்புகை பரவியது.
Published on: 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தார் பிளாண்ட் தொழிற்சாலையில் தீப்பற்றி தார் மளமளவென எரிந்து வானளவு கரும்புகை பரவியது.

ஆசூர் பகுதியில் உள்ள பாபு என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையில், தார் உருக்கும் பணியின் போது அதிக வெப்பம் காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தார் கொழுந்துவிட்டு எரிந்து வானளவுக்கு கரும்புகை வெளியேறிய நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் நீடித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

newstamil.tv