Salem TVK
மாவட்ட செய்திகள்
தவெகவின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்... சேலத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் சேலத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் சேலத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
தவெக-வின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள்
, 12 ஆயிரத்து 500 கிளைகளாக பிரித்து கட்சியின் கொள்கைகளை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
