krr eviction
மாவட்ட செய்திகள்
பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
