KNK Dmk it wing house issue
மாவட்ட செய்திகள்
திமுக நிர்வாகியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள் ஜேசிபியுடன் மூன்று வாகனங்களில் வந்த நபர்கள்
குமரி மாவட்டம் குளச்சலில் திமுக ஐடி விங் அமைப்பாளரின் சிமெண்ட் கூரை வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் குளச்சலில் திமுக ஐடி விங் அமைப்பாளரின் சிமெண்ட் கூரை வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். லியோன் நகர் பகுதியில் பழைய சிமெண்ட் கூரை வீட்டில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான திமுக ஐடி விங் அமைப்பாளர் டேவிட் குமார், வீட்டை பாரமரித்து புதிய அறை கட்டும் பணியை தொடங்கினார்.
இந்நிலையில், அவரது வீடு அடித்து நொறுக்கப்பட்டு தரைமட்டமாகி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவியில் ஜேசிபியுடன் மூன்று இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் செல்லும் காட்சி பதிவாகியிருந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
