13
மாவட்ட செய்திகள்
பந்து போன்று டேப்பினால் சுற்றி சிறைக்குள் வீசிய மர்ம நபர்.. இம்மாதத்தில் மட்டும் 3 முறைக்கு மேல் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
சென்னை புழல் சிறைக்குள் போதைப்பொருட்களை வெளியில் இருந்து வீசி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புழல் சிறைக்குள் போதைப்பொருட்களை வெளியில் இருந்து வீசி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புழல் சிறை வளாகத்தில் டேப்பினால் சுற்றப்பட்ட பந்து போன்ற பொருள் இருப்பதை பார்த்த போலீசார் பிரித்து பார்த்ததில் 34 கிராம் கஞ்சா, பீடி கட்டுகள், லைட்டர் ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறை காவலர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் புழல் ஜிஎன்டி சாலையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் புழல் சிறைக்குள் போதைப்பொருட்களை வீசி சென்றது தெரியவந்தது.
இந்த மாதத்தில் மட்டும் 3 முறைக்கு மேல் அடையாளம் தெரியாத நபர்கள் புழல் சிறைக்குள் போதை பொருட்களை வீசி சென்று உள்ளனர்.

