nagai
nagai

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் தொடக்க நிகழ்வாக மினாராக்களில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும் நிகழ்வில்
Published on: 

புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் தொடக்க நிகழ்வாக மினாராக்களில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும் நிகழ்வில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும் பங்கேற்று வழிபாடு செய்தனர். நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழா 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பாரம்பரிய மண் தட்டில் அனைவருக்கும் தப்ரூக் என்று சொல்லப்படும் சீனி பிரசாதம் வழங்கப்பட்டது.

newstamil.tv