Thiruvarur
மாவட்ட செய்திகள்
உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா தொடக்கம்... 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நெல்ஜெயராமன் பாரம்பரிய பாதுகாப்பு மையம் நடத்தும் உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நெல்ஜெயராமன் பாரம்பரிய பாதுகாப்பு மையம் நடத்தும் உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.
இவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு இரட்டிப்பாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர்.
இதன் மூலம் பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்படும் என கூறப்படுகிறது.
