Cuddalore
Cuddalore

அடுத்தடுத்து 3 வீடுகளில் பின்பக்க கதவை உடைத்து திருட்டு... பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயின் பறிப்பு

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு பெண்ணின் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on: 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு பெண்ணின் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நந்திமங்கலம் பகுதியில் பாரதிதாசன், அசோக்குமார் என்பவர்களது வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள்,

அங்கு எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த சக்திவேல் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

வீட்டின் சக்திவேலின் மனைவியின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தாலி செயினை இழுக்க முயன்றபோது, கையில் கிடைத்த மூன்று பவுன் தாலி செயினோடு தப்பி ஓடினர்.

newstamil.tv