VLR Bike theft
மாவட்ட செய்திகள்
கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு
விஏஓ மணிவாசனின் பைக்கில் சாவியை போட்டு திறந்து திருடிச் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு இளைஞர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. மாச்சம்பட்டு கிராம நிர்வாக அலுவலரான மணிவாசன் என்பவர், குடியாத்தத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பைக்கை நிறுத்தி விட்டு நூலகத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில், கள்ளச்சாவி கொண்டு அங்குள்ள பைக்குகளை திறக்க முயன்ற இளைஞன், முடிவில் விஏஓ மணிவாசனின் பைக்கில் சாவியை போட்டு திறந்து திருடிச் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
