

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஒப்பந்த ஊழியரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வார்டுக்கு வெளியே இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், பாதுகாவலர் பாலமுருகன் என்பவரை சிலர் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும் என சக ஒப்பந்த ஊழியர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், தாக்கியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.