37
37

திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு... விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கலப்பட நெய் பறிமுதல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, 250 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்தார்.
Published on: 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, 250 கிலோ கலப்பட நெய்யை பறிமுதல் செய்தார்.

பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் விளக்கு நெய்யில் காற்று மாசு ஏற்படுத்தும் கலப்படம் செய்யப்படுவதால் அதற்கு தடை விதிகப்பட்டுள்ளது.

எனினும் அதனை மீறி வியாபாரிகள் சிலர் தொடர்ந்து கலப்பட நெய் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களோடு திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பல்வேறு கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் இருந்தும் கலப்பட நெய்யை பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து கலப்பட நெய் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

newstamil.tv