அடாது மழையிலும் விடாது கிரிவலம் சென்ற பக்தர்கள்

சாரல் மழையில் ரெயின் கோட் அணிந்து பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
Published on: 

சாரல் மலையிலும் ரெயின் கோட் அணிந்து சென்ற பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் ஐப்பசி மாத பௌர்ணமி விடுமுறை நாளில் வந்ததால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 14
கிலோமீட்டர் மலையைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம்

கிரிவலம்
கிரிவலம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 14 கிலோமீட்டர் மலையை சுற்றி ஒரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக
பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்

அதுபோல் ஐப்பசி மாத பௌர்ணமி இன்று காலை 11: 31 மணி அளவில் தொடங்கி நாளை காலை 10.16 வரை பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ள
நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வருகின்றனர்.

பக்தர்கள் கிரிவலம்
பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கிரிவலம் வரும் ஆன்மீக பக்தர்கள் சாரல் மலையிலும் ரெயின் கோட் அணிந்து
சென்றனர்.

திருவண்ணாமலை
குழந்தைகளுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டம்
newstamil.tv