TNL Banana leaf
மாவட்ட செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் இலை அழுகல் நோய் ஏற்பட்டு ஆயிரக் கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில், போலி உரம் காரணமாக ஏற்பட்டதா என விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மறறும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நடவு செய்யப்பட்டு நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுத்து கருகியதாக விவசாயிகள் தெரிவித்தனர். நோய் பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணவும், சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
