36
மாவட்ட செய்திகள்
கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து விலை உயரும் தக்காளி..
சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து விலை உயர்வை கண்டு வரும் தக்காளி கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து விலை உயர்வை கண்டு வரும் தக்காளி கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்றைய தினம் மொத்த விற்பனையில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 35 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, இன்று மேலும் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்தது.
கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நவீன் தக்காளி கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனையானது.
சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறிய வியாபாரிகள், மழையால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
