Ranipettai
மாவட்ட செய்திகள்
கரையில் விளையாடிவிட்டு குளிக்க சென்ற மூன்று சிறுவர்களுக்கு நடந்த சோகம்
ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டு குன்னத்தூர் கிராமத்தில் குட்டையில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டு குன்னத்தூர் கிராமத்தில் குட்டையில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டு குன்னத்தூரை சேர்ந்த சரவணன் மகன் புவனேஷும், கோபி என்பவரின் மகன்களான மோனி பிரசாத் மற்றும் சுஜன் ஆகியோரும் குட்டையின் கரையில் விளையாடிவிட்டு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கினர்.
அவர்கள் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
