Ranipettai
Ranipettai

தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரயில்கள் தாமதம்... புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கோளாறு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரயில் போக்குவரத்து தடைபட்டு பயணிகள் இன்னலுக்கு ஆளாகினர்.
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் ரயில் போக்குவரத்து தடைபட்டு பயணிகள் இன்னலுக்கு ஆளாகினர்.

புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் சென்னை பெங்களூரு விரைவு ரயில்

, நீலகிரி விரைவு ரயில், காவிரி விரைவு ரயில் என அனைத்து ரயில்களும் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே நிறுத்திப்பட்டன.

ஊழியர்களால் பழுது சரி செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து கால தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன.

newstamil.tv