

இதுமட்டுமல்லாது, அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை கூறும் கதையே வேடிக்கையாக தான் உள்ளது எனவும் கூறும் திவ்யா, பாதிக்கப்பட்ட நான் தான் வாழவே பயந்து நடுங்கும் நிலையில் உள்ளதாகவும் கூறி உள்ளார்.
பாஜக நிர்வாகி மீது...
பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் தன்னை திருமணம் செய்து கொள்வதாககூறி, தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, அவரால் உருவான கருவையும் கட்டாயமாக கலைத்துவிட்டு, தற்போது கொ* மிரட்டல் விடுப்பதாக கட்சித்தலைமைக்கு ஒரு லெட்டரை பறக்கவிட்டார் அதே கட்சியை சேர்ந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் திவ்யா சேஷாத்ரி. கூடவே போட்டோக்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என அசைக்க முடியாத ஆதாரங்களும் இருக்க, விவகாரம் வெடித்து வெளியே கிளம்பினால் கட்சிக்குதான் கெட்டபெயர் என உஷாரான தலைமை, கருப்பு முருகானந்தத்தை நீக்கி அனைவரது வாயையும் அடைத்தது.
திவ்யாவும் நீக்கம்
அப்பாடா... நமது புகாருக்கு செவி சாய்க்கப்பட்டதாக சந்தோஷமடைந்த திவ்யாவையும் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அடுத்த ஷாக்கையும் கொடுத்தது கட்சித்தலைமை.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வாங்கி தருவதுதானே பிராப்தம். கட்சியைவிட்டே நீக்குவது அக்கிரமமாக உள்ளதே? என பலரும் வரிந்துகட்டி ஆதரவுக்குரல் கொடுக்க, திவ்யா சேஷாத்ரி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை, வாயை திறந்தாலே வண்டி வண்டியாய் பொய் கொட்டும் என பெற்ற தாயும், கட்டிய கணவனும்-சொந்த தாய்மாமாவுமான சேஷாத்ரியும் பகீர் வாக்குமூலம் கொடுத்தனர்.
மிரட்டினாரா திவ்யா?
அதோடு, திருவாரூர் மாவட்டம் கேக்கரை கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் ராஜா என்பவரும் திவ்யா மீது பரபரப்பு புகார் கொடுத்தார். தன்னுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து, கணக்கு வழக்கின்றி பணத்தை கறந்துள்ள திவ்யா, ஒருகட்டத்தில் கர்ப்பமாக இருப்பதாக கூறி மிரட்டியதாகவும், ஆனால் குடும்ப கட்டுப்பாட்டு செய்துள்ள அவருக்கு குழந்தையே பிறக்காது என்பது திவ்யாவின் தாய் மூலம்தான் தனக்கே தெரியவந்ததாகவும் கூறினார்.
அதுமட்டுமல்லாது, அடியாட்களை வைத்து தனது செல்லப்பிராணிகளை அடித்துக் கொ*றதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
கொந்தளித்த திவ்யா
இந்நிலையில், தான் புகார் கொடுத்து 41 நாட்களாகியும் கருப்பு முருகானந்தம் தற்போதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அதன் பின்னால் பாஜகவின் முக்கிய புள்ளிகளே உள்ளதாகவும் திவ்யா சேஷாத்ரி குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்ட நான் பயந்து பயந்து வாழ வேண்டும்? ஆனால் பச்சை துரோகம் செய்த கருப்பு முருகானந்தம் சட்டை காலரை தூக்கிவிட்டு தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி நடப்பதா? என கொந்தளித்தார்.
சொத்து அபகரிப்பு
கருப்பு முருகானந்தத்தை கட்சியில் இருந்து நீக்கியிருந்தாலும் திரைமறைவில் அவரை ஒரு கூட்டமே காப்பாற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறிய திவ்யா, புகார் கொடுத்த நான்தான் காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
தனது சொத்தை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுவதுபோல உள்ளே நுழைந்த கருப்பு முருகானந்தம் கருப்பு ஆடு என்பது தனக்கு முன்பே தெரியாது, அவரே தனது சொத்தை அபகரிக்க திட்டம் போட்டதால் வேறுவழியின்றி அடிமைபோன்று உடன் வாழ்ந்ததாகவும் கூறினார் திவ்யா.
பிடிக்க முடியவில்லையா?
அதேபோல், அவருக்கு திருமணமான விஷயமே தனக்கு ஆரம்பத்தில் தெரியாது எனக்கூறிய திவ்யா சேஷாத்ரி, எந்த சொத்துக்காக தனது தாய் ரேவதியும், முன்னாள் கணவன் சேஷாத்ரியும் கொடுமை செய்தார்களோ அதே கொடுமையைதான் கருப்பு முருகானந்தமும் செய்ததாக கூறினார்.
இப்படி ஒரு புகாரில் சிக்கிய கருப்பு முருகானந்தத்தை பிடிக்க முடியவில்லை என காவல்துறை கதை கூறிக்கொண்டிருப்பதே வேடிக்கையாக உள்ளது, பொது இடத்தில் தைரியமாக போராட்டத்தில் ஈடுபடும் அவரை பிடிக்க முடியவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
எப்படி? எப்படி?
இதனிடையே, கருப்பு முருகானந்தம் பிடியில் உள்ள தனது சொத்தின் மதிப்பு 4 கோடி ரூபாய் எனவும் அதில் வரும் வாடகையை வைத்துதான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார் திவ்யா. அது எப்படி? கருப்பு முருகானந்தம் பிடியில் உள்ள சொத்துக்கான வாடகை திவ்யாவிற்கு வரும்? என்ற கேள்வி எழுகிறது. மேலும், கருப்பு முருகானந்தத்தின் வயதிற்கு அவருக்கு திருமணம் ஆகவில்லை என எப்படி நினைக்க முடியும்.?
அதுவும் அரசியலில் உள்ள அவரது குடும்ப பின்னணி அதே கட்சியில் இருந்த திவ்யாவிற்கு எப்படி தெரியாமல் இருந்திருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.
பாடமாக இருக்க வேண்டும்
அதேபோல், தாய் ரேவதி தன்னை பெண் குழந்தை என்பதற்காக பிறந்தவுடனேயே கொ* செய்ய முயன்றதாகவும், பாட்டி வீட்டில் வளர்ந்த தன்னை படிக்க வைப்பதாக அழைத்து வந்து 16 வயதிலேயே தாய்மாமாவுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், அவரும் தன்னை பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கியதாகவும், தாயும் தன்னை பாலியல் தொழிலில் தள்ள பார்த்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் திவ்யா.
இறுதியாக தனது வாழ்க்கையையே சீரழித்த தாய் முதல் கருப்பு முருகானந்தம் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.