Paddy mdu
மாவட்ட செய்திகள்
நெல் கொள்முதல் நிலையத்தில் குறித்த நேரத்தில் வராத லாரிகள்
மழையில் நனைந்து முளைக்க தொடங்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய நேரத்தில் லாரிகள் வராததால் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இரும்பாடி, கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல் மூட்டைகள் தற்காலிக கொள்முதல் நிலையம் என்ற பெயரில் சாலையிலே போதிய பாதுகாப்பு இன்றி வைக்கப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து முளைக்க தொடங்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
