11
மாவட்ட செய்திகள்
இடப் பிரச்சனையில் பெண் மீது டிராக்டரை ஏற்ற முயற்சி.. டிராக்டரை ஏற்ற முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சி
தேனி அருகே இடப் பிரச்னையில் பெண் மீது டிராக்டரை ஏற்ற முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி அருகே இடப் பிரச்னையில் பெண் மீது டிராக்டரை ஏற்ற முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள், தமது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக கட்டுமானப் பொருட்களை அருகில் இருந்த காலி இடத்தில் போட்டு வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்த சூழலில், பழனியம்மாள் வசிக்கும் இடம் தங்களுக்குச் சொந்தமானது எனவும், உடனடியாக கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும் என கூறி, பால்ராஜ், பெருமாள்சாமி, அவரது சகோதரர் ஈஸ்வரன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காலி இடத்தில் போடப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை டிராக்டர் மூலம் சேதப்படுத்தியதோடு, எதிர்ப்புத் தெரிவித்த பழனியம்மாள் மீதும் டிராக்டரை ஏற்ற முயன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

