

8 ஆண்டு காதலை சுக்குநூறாக்கிய மனைவியின் செயலால் மனமுடைந்த கணவன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தேவாலயத்தையே பூட்டிவிட்டு ஃபாதர் தப்பி ஓடினார்.
தன் கையாலேயே திருமணத்தை செய்து வைத்துவிட்டு, அந்த திருமண உறவிலேயே கண்ணியத்தை மீறி புகுந்து விளையாடி, மேய்ப்பன் என்ற சொல்லையே இழிவுபடுத்தியவரை இக்கட்டான சூழலிலும் இளம்பெண் ஃபாதர் பாதர் என அழைப்பதே ஆச்சரியம் தான். என்ன நடந்தது?
எட்டு ஆண்டுகால காதல்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே சிங்கித்துறை பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 8 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள செல்வமாதா ஆலயத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். காதல் மனைவியுடன் 4 மாதங்கள் ஊரில் இருந்த கணவன் அடுத்து கப்பல் பணிக்காக வெளிநாட்டிற்கு சென்றார். அதன்பிறகு தான் தனது வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை.
வெறும் 4 மாதங்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்த கணவன் மனைவியை பார்ப்பதற்காக கடந்த 20ஆம் தேதி ஊருக்கு வந்துள்ளார்.
மனைவியின் கேள்விகளால் சந்தேகம்
ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டில் இருக்காமல் மாதக்கணக்கிலேயே திரும்பி வந்த தனது வருகையை மனைவி கொண்டாடி தீர்ப்பார் என எதிர்பார்த்த கணவருக்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதுவே ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுமட்டுமல்லாது, ஏன் திடீரென ஊருக்கு வர வேண்டும்? அப்படி என்ன அவசரம்? எப்போது திரும்பி செல்வீர்கள்? அடிக்கடி வந்து சென்றால் வீண் செலவுதானே? என கணவனை திருப்பி அனுப்புவதுபோன்ற உரையாடலும் மனைவியின் வார்த்தைகளில் தென்பட்டது.
படுக்கையறை வரை...
இதனால், மேலும் சந்தேகமடைந்த கணவன், மனைவியின் செல்போனை ஸ்கேன் செய்துள்ளார். அப்போதுதான், அதிர்ச்சியே காத்திருந்தது. திருமண அறிக்கை, வரவேற்பு மற்றும் இறைவார்த்தை வழிபாடு, சம்மதம் கேட்டல், மோதிரம் ஆசீர்வதித்தல், திருமண ஆசீர்வாதம், திருமணப் பதிவேட்டில் கையொப்பம், சான்றிதழ் வழங்குதல் என அத்தனை நடைமுறைகளையும் கடைபிடித்து எந்த ஃபாதர், தனது காதல் மனைவியை கரம்பிடித்து வைத்தாரோ? அதே அருட்தந்தையே படுக்கையறைவரை புகுந்து நரிவேலை பார்த்துள்ளதைக் கண்டு கண்ணீர் வடித்தார் கணவர்.
செல்வமாதா ஆலயத்தின் ஃபாதர் ஷிவாகரும், தனது மனைவியும் தகாத உறவில் இருந்த வீடியோக்கள், ஆடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ்அப் சேட்டுகள் ஆகியவற்றை பார்த்து ஆத்திரமடைந்த கணவர், மனைவியிடம் கத்தி சண்டையிட்டுள்ளார். அத்தனையும், ஆதாரமாக செல்போனில் இருக்க வேறுவழியின்றி கணவரிடம் தனது தகாத உறவை ஒப்புக்கொண்டார் மனைவி. அதன்பிறகு, மது அருந்திய கணவன் தனது செல்போனை வீட்டில் வைத்துவிட்டு மனைவியின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
கணவனின் செல்போனில் ஆட்டோமேட்டிக் ஆடியோ ரெக்கார்ட் இருப்பதை அறியாத மனைவி, ஃபாதர் ஷிவாகருக்கு போன் செய்து வீட்டில் நடந்த களேபரத்தை ஒப்பித்துள்ளார். அய்யோ நம்மால் ஒரு காதல் கணவன்-மனைவியின் குடும்ப சாம்ராஜ்ஜியமே சிதைந்துவிட்டதே என கண்ணீர் வடிக்க வேண்டிய ஃபாதர் ஷிவாகரோ எந்தவித பதற்றமும் இல்லாமல் கூலாக பேசினார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ள...
நாம் நெருங்கி பழகியது தனது கணவருக்கு தெரிந்துவிட்டது என இளம்பெண் கண்கலங்க, நீ எதற்கு உன் கணவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினாய்? வெளியில் யாரிடமாவது உளறினால் என் பெயர்தானே நாறும்? நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இனி வெளியில் செல்ல முடியும்? கணவர் வெளிநாட்டிற்கு செல்லும்வரை உனது செல்போனை தாய் வீட்டிலேயே வைத்திரு என நான்தான் படித்து படித்து சொன்னேனே? என் பேச்சைக் கேட்டாயா? என தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலேயே பேசினார் ஷிவாகர்.
தன்னை பெரிய பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டாயே? ”நான் செய்தது தப்பு தான்” என உன் கணவரிடம் மன்னிப்பு கேட்டாயா? என ஏதோ அந்த பெண் மீது மட்டுமே தவறு உள்ளது போன்றும், தனது வாழ்க்கையே போய்விட்டது என்பதுபோன்றும் பேசி உள்ளார் ஃபாதர் ஷிவாகர்.
இந்த உரையாடல் தொடர்பான ஆடியோவையும் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே போன இளம்பெண்ணின் கணவர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஃபாதரின் தரங்கெட்ட வேலையை அறிந்த தம்பதியின் உறவினர்கள் ஆக்ரோஷமாக தேவாலயத்திற்கு சென்றனர்.
இதனை முன்கூட்டியே அறிந்து உஷாரான ஷிவாகர், தேவாலயத்தையே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
வீடியோவில் காணலாம்