தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் உள்ளிட்ட இருவர் இருசக்கர வாகனத்துடன், தடுப்புச்சுவர் இல்லாத வடிகால் ஓடையில் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரையும் அவ்வழியாக வந்த சக வாகன ஓட்டிகள் சேர்ந்து பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.