

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் போது தனது வாகனத்தை தனக்கே தரவேண்டும் என பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் அரங்கேறியது.
ஆயுதப்படை மைதானத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த அரக்கோணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வாகனத்தை யாரும் ஏலம் கேட்க வேண்டாம் எனவும், தனது வாகனத்தை தனக்கே தர வேண்டும் எனவும் கூறி கதறி அழுதார்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட தொகைக்கு வாகனம் அந்த பெண்ணுக்கே வழங்கப்பட்டது.