nainar nagendran
nainar nagendran

பாஜக கூட்டணிக்கு விஜய் செல்வார் - அப்பாவு

சபாநாயகர் அப்பாவு ஆசை நிறைவேறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்
Published on: 

தமிழக வெற்றிக் கழக தலைவர், பாஜக கூட்டணிக்கு போய் விடுவார் என்ற சபாநாயகர் அப்பாவு ஆசை நிறைவேறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்கள் நலனுக்காக திமுக ஒருபோதும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதில்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசுக்கு எதிராகவே போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

newstamil.tv