பட்டாசு விற்பனையில் ஆன்-லைனில் மோசடி

சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசுக்கடைகளின் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
மோசடி
Published on: 

இருந்த இடத்தில் இருந்தபடியே தீபாவளிக்கு ஆஃபரில் பட்டாசுகளை அள்ள வேண்டும் என்ற ஆசையில் பலர் பணத்தை கொடுத்து ஏமாறும் நிலையில் தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப்போடும் மோசடி கும்பலை கட்டுப்படுத்த வேண்டும் என பட்டாசுக்கடை உரிமையாளர்களும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர்.

நெருங்கும் பண்டிகை
தீபாவளிநியூஸ்தமிழ்24x7

அரங்கேறும் ஆன்-லைன் மோசடி

ஏற்கெனவே ஆன்-லைன் விற்பனையால் பட்டாசு கடைகளில் ஆட்களின்றி ஈ மொய்த்துக் கொண்டிருப்பதாக ஒருபக்கம் உரிமையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்க, மறுபக்கம் அதே ஆன்-லைன் மூலமே மற்றொரு மோசடியும் அரங்கேறி வருவது அவர்களின் தீபாவளியையே தீப ஒளியில்லாமல் மாற்றி வருகிறது.

கவர்ச்சிகர விளம்பரம்

தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், இன்றைய காலகட்டத்தில் குண்டூசி முதல் குளிக்கும் சோப்புவரை ஆன்லைனில் ஆர்டர் போடும் மக்கள் பட்டாசுகளை மட்டும் அலைந்து திரிந்து கடைகளிலா வாங்குவார்கள்?

இன்ஸ்டா, ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களைதான் துலாவுகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிக அளவில் தள்ளுபடி, நினைத்துப் பார்க்காத விலையில் காம்போவில் பட்டாசு, சில மணி நேரங்களிலேயே இலவச டோர் டெலிவரி என ஒரு மோசடி கும்பல் கவர்ச்சிகர விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கும், பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்கும் அல்வா கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஆன்லைன் மோசடி
சிவகாசி பட்டாசுநியூஸ்தமிழ்24x7

சிவகாசி தான்...

பட்டாசு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது விருதுநகர் மாவட்டம் சிவகாசி தான். இங்குள்ள கடைகளின் பெயரை பயன்படுத்திதான் மோசடி கும்பலும் தங்கள் வேலையை காட்டி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிறந்த ஊரான மீனம்பட்டியில் உள்ளது ஸ்ரீ வெற்றி பட்டாசுக்கடை. இந்த பட்டாசுக்கடையின் பெயரை பயன்படுத்தி ஆன்-லைனில் அவர்களது வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ள மோசடி கும்பல் அதேபோன்று பல கடைகளின் பெயர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக தெரிகிறது.

’ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் ரூ.2 ஆயிரத்திற்கே கிடைக்கும்,’ என நம்ப வைத்து அவர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு பட்டாசுகளை கண்ணில் காட்டாமல் கல்தா கொடுத்துள்ளனர்.

பிரபல கடைகளுக்கு குறி

அதேபோல், பாறைப்பட்டி என்ற ஊர் பெயரை ஆங்கிலத்தில் பேராப்பட்டி என மாற்றி ஸ்ரீ லஷ்மி பட்டாசுக்கடையின் வாடிக்கையாளர்களிடமும் பணத்தை கறந்துள்ள மோசடி கும்பல் சிவகாசியில் உள்ள அத்தனை பிரபல பட்டாசுக்கடைகளையும் குறிவைத்து கல்லா கட்டி வருவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விருதுநகர் சைபர் கிரைம் காவல்துறையிடம் 300-க்கும் மேற்பட்ட பட்டாசுக்கடை உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

சிவகாசி பட்டாசு
ஆன்லைன் மோசடிநியூஸ்தமிழ்24x7

வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

ஆனாலும், மோசடி கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை என கவலை தெரிவித்த அவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தபிறகு யோசித்து பயனில்லை, பணத்தை செலுத்தும் முன்பே அப்படி ஒரு பட்டாசுக்கடை உள்ளதா? அங்கு ஆன்லைனில் விற்பனை நடைபெறுகிறதா? என்பதையெல்லாம் ஆராய வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர்.

மோசடி
ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அரசு அறிவிப்பு
newstamil.tv