11
மாவட்ட செய்திகள்
இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறப்பு.. கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் திறக்கபட்டது.. நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கர்கள் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கர்கள் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனிடையே 2 ஆம் போக பாசத்திற்காக கெலவரப்பள்ளி அணையிலிருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மே மாதம் வரை 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

