Wife complains to superintendent of police
மாவட்ட செய்திகள்
காவல் நிலையத்தில் கைதியை தாக்கிய காவலர்... முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்
காரைக்கால் அருகே காவல் நிலையத்தில் கணவரை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கைதியின் மனைவி புகார் அளித்துள்ளார்.
காரைக்கால் அருகே காவல் நிலையத்தில் கணவரை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கைதியின் மனைவி புகார் அளித்துள்ளார்.
காக்கமொழியை சேர்ந்த பாண்டியன், போக்சோ வழக்கில் கடந்த 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டு நிரவி காவல் நிலைய செல்லில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்போது, அங்கு வந்த கோட்டுச்சேரி காவல் நிலைய காவலர் ஒருவர், பாண்டியனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யாவிடம் பாண்டியனின் மனைவி உஷா புகார் அளித்துள்ளார்.
