Kaatu mannar kovil
மாவட்ட செய்திகள்
நூதன முறையில் மோசடி செய்து ஏமாற்றிய பெண் கைது
மேலும், சுய தொழில் செய்வதற்கு லோன் பெற்று தருவதாக கூறியும் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வட்டியில்லா கடன் பெற்று தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 100 பவுன் தங்க நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தனியார் வங்கி, மகளிர் சுய உதவிக் குழுக்களில் நகைகளை மீட்க வரும் பெண்களை குறிவைத்து, தனக்கு தெரிந்த நபரிடம் கோடிக்கணக்கான கருப்பு பணம் உள்ளதாகவும், வட்டியில்லா கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி உயர் அதிகாரிகள் கையெழுத்திட்ட போலி பத்திரத்தை காட்டி பலரிடம் நகைகளை வாங்கியுள்ளார். மேலும், சுய தொழில் செய்வதற்கு லோன் பெற்று தருவதாக கூறியும் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
