TVL Head
மாவட்ட செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே பெண் தலை சிதைத்து கொ*ல
அவனிடம் இருந்து தனத்தின் கம்மல்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணின் தலையை சிதைத்து கொன்று விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த மது போதை இளைஞரை போலீசார் கைது செய்தனர். சின்னநத்தம் கிராமத்தில் சாலையேரம் உள்ள மாந்தோப்பில் பூ வியாபரியான தனம் என்பவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்து சென்ற போலீசார், அங்கு கிடைத்த ரத்தக்கறை படிந்த வளையலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபோதையில் நெற்றியில் விபூதி பட்டையுடன் நின்றிருந்த தினேஷ் என்ற இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் அவன் கொலை செய்தது தெரியவந்தது. அவனிடம் இருந்து தனத்தின் கம்மல்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
