26
மாவட்ட செய்திகள்
செல்ஃபோன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்.. காதலி வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என பிடிவாதம்
காதலர் தினத்தில் காதலியை பார்க்க வேண்டும் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கலீம் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறிக்கொண்டு காதலி வரும் வரை இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.
காதலர் தினத்தில் காதலியை பார்க்க வேண்டும் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கலீம் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறிக்கொண்டு காதலி வரும் வரை இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.
நள்ளிரவு இரண்டு மணிக்கும் மேலாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், சம்பந்தப்பட்ட இளம் பெண்ணை போலீசார் காரில் அழைத்து வந்த பிறகு இளைஞர் கீழே இறங்கினார். இதனை அடுத்து இளைஞரை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

