9
மாவட்ட செய்திகள்
கவியருவியில் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு
கோவை ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் செந்நிறமாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் செந்நிறமாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கவியருவியில் தடுப்பு வேலிகளையும் உடைத்து கொண்டு நீர் ஓடுகிறது.
இந்நிலையில், அருவியின் நீர்வரத்து சீரான பின்பே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

