ரூ.33 லட்சம் நன்கொடை கேட்பு? கேரள மாணவிக்கு அதிர்ச்சி

முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்தும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தவிர்த்து, கூடுதலாக 33 லட்சம் ரூபாய் நன்கொடை கேட்பதாக பி.எஸ்.பி. தனியார் மருத்துவக் கல்லூரி மீது புகார் எழுந்துள்ளது.
ரூ.33 லட்சம்?
நன்கொடையால் அதிர்ச்சிநியூஸ்தமிழ்24x7
Published on: 

ஏற்கனவே சவிதா மருத்துவக் கல்லூரி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரி மீது கேரள மாணவியின் பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பிஎஸ்பி கல்லூரி
கல்லூரி மீது புகார் நியூஸ்தமிழ்24x7

கேரள மாணவிக்கு...

தமிழக அரசின் முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் இடம் கிடைத்தும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்திய பிறகும், 33 லட்சம் ரூபாய் நன்கொடை கேட்டு கேரள மாணவியை அலைக்கழிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆளானது பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரி.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். முடித்த மாணவி அலினா மரியஜான் என்பவர், முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தமிழக அரசின் முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

அவருக்கு, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே செயல்பட்டு வரும் பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவம் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.

ரூ.18 லட்சம் செலுத்தியும்...

இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயித்த நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணமாக சுமார் 18 லட்சம் ரூபாயை மாணவி அலினா தரப்பில் நவம்பர் 6ஆம் தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளார்.

நன்கொடை விவகாரம்
தந்தை குற்றச்சாட்டுநியூஸ்தமிழ்24x7

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவின் கடைசி நாளான நவம்பர் 10ஆம் தேதியன்று, கல்லூரியில் அசல் ஆவணங்களை சமர்பிப்பதற்காக மாணவி அலினா தமது பெற்றோருடன் பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்றுள்ளார்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி தகவலை கேட்டு, மாணவி அலினாவும், அவரது பெற்றோரும் எதற்காக நன்கொடை? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்கொடை ரூ.33 லட்சம்

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் 18 லட்சத்தை செலுத்தியிருந்தபோதும், கூடுதலாக 33 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதற்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படாது என்று கல்லூரி நிர்வாகத்தினர் வற்புறுத்துவதாக மாணவியின் தந்தை தில்பர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் 33 லட்சம் ரூபாய் நன்கொடை கேட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி அலினாவும், அவரது பெற்றோரும் செய்வதறியாது தவித்தனர்.

நன்கொடை கேட்பு
நன்கொடையால் அதிர்ச்சிநியூஸ்தமிழ்24x7

பெற்றோர் கோரிக்கை

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பி.எஸ்.பி. தனியார் மருத்துவக் கல்லூரி மீதான நன்கொடை வசூல் குற்றச்சாட்டு குறித்து, உடனடியாக தமிழக அரசு தலையிட்டு விசாரணை நடத்தி, மாணவி அலினாவுக்கு ஒதுக்கப்பட்ட எம்.டி. ஜென்ரல் மெடிசின் MD General medicine இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் ஒரு அதிர்ச்சி

ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ள நிகர்நிலை அந்தஸ்து கொண்ட சவிதா மருத்துவக் கல்லூரி மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்து, தமிழக அரசின் சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், மருத்துவக் கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில், மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரி மீதும் தற்போது புகார் எழுந்திருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை  தேவை
பெற்றோர் கோரிக்கைநியூஸ்தமிழ்24x7

மாணவியின் புகார் குறித்து பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் விளக்கமும், தமிழக அரசின் நடவடிக்கையும் என்னவாக இருக்கும்? என்பதே நம்முன் தற்போது எழுந்துள்ள கேள்வி.

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் இடம் கிடைத்தும், கல்வி கட்டணத்தை தவிர, கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

ரூ.33 லட்சம்?
ரூ.33 லட்சம் நன்கொடையா? கேரள மாணவிக்கு அதிர்ச்சி