Lifestyle
Lifestyle

உங்களை எப்போதும் நிராகரிக்கப்படுபவராக உணர்கிறீர்களா? மருத்துவர்கள் கூறுவது என்ன ?

உங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட மனநிலை என்பது கடினமான சூழலில் அனைத்திலும் நான் வலிமையற்றவன், என்னால் எதையும் செய்ய முடியாது போன்ற எண்ணங்களை தூண்டும் இந்த மனநிலையில் இருந்து நம்மை எப்படி மீட்டுக்கொள்ளலாம் என்பதை பற்றிய சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...!
Published on: 

உங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட மனநிலை என்பது கடினமான சூழலில் அனைத்திலும் நான் வலிமையற்றவன், என்னால் எதையும் செய்ய முடியாது போன்ற எண்ணங்களை தூண்டும் இந்த மனநிலையில் இருந்து நம்மை எப்படி மீட்டுக்கொள்ளலாம் என்பதை பற்றிய சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...!

நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நம்பிக்கையின்மை, உறவுகளில் பிரச்சனை போன்ற காரணங்களால் நமது மனநிலை வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக் கண்டறியாமல் எப்போதும் ஒரு உதவியற்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இதனால் நாம் அன்றாடம் வேலைவாய்ப்புகள், உறவுகள், புதிய முயற்சிகள் என எதிலும் நம்மை முழுமையாக ஈடுப்படுத்திக்கொள்ளாத நிலைக்கு செல்கிறோம், இதனால் வெளிச்சம் தெரியும் இடத்தில் கூட உங்கள் நிழலை மட்டுமே பார்க்க வைக்கும் ஒரு நிலைக்கு சென்று விடுவீர்கள்.

இந்த மனநிலையில் இருந்து வெளியே வர திடமான உறுதி, விழிப்புணர்வு தேவை,என்ன நடந்தது என்பதற்கு பதிலாக இப்போது என்ன செய்யலாம் என்ற நீங்களே கேட்டு கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய சிறிய வெற்றிகளைக் கூட பதிவு செய்யுங்கள்.

உங்களுக்கு நன்மை தரக்கூடிய சிறிய விஷயங்களையும் தினமும் கவனியுங்கள், இது உங்களது கண்ணோட்டத்தையே மாற்ற உதவும், இந்த மனநிலையில் நீங்கள் இருப்பதன் மூலம் உங்களது முழுமையான ஆற்றலை கட்டுப்படுத்த முடியும்.

உங்களது வாழ்க்கையின் பாதையை மாற்ற விரும்புகிறீர்களா? ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பக்கமாக நினைத்து பயணம் செய்யுங்கள். பழி வரும் இடத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளவும், சோர்வாகும் போது வலிமையாகவும், விமர்சிக்கப்படும் இடங்களில் வளர்ச்சியையும் தேர்வு செய்து பாருங்கள், வாழ்க்கை உங்களுக்கு ஏற்றவாறு மாறும்.

newstamil.tv