

STROKE அதாவது பக்கவாதம் அப்படின்னு சொன்னாலே, அது வயசானவங்களுக்கு மட்டும்தான் வரும்னு நம்மள பல பேர் நினைச்சிட்டு இருக்கோம். ஆனா, அதுதான் இல்ல!
இன்னைக்கு இருக்குற மாறிப்போன Lifestyle ,foodhabits -ஸால இப்போ 20, 30 வயசுல இருக்குற இளைஞர்களுக்கும் பக்கவாதம் வர்றது ரொம்பவே அதிகரிச்சிருக்குன்னு பல medical reports சொல்லுது! நம்ம உடம்பு ஸ்ட்ரோக் வர்றதுக்கு முன்னாடி சில முக்கியமான சிக்னல்ஸை கொடுக்கும்.
அதை ஆரம்பத்துலயே கவனிச்சா, பெரிய ஆபத்துல இருந்து தப்பிக்கலாம். இன்னைக்கு வீடியோல, இளைஞர்கள் கண்டிப்பா அலட்சியப்படுத்தக் கூடாத முக்கியமான பக்கவாத அறிகுறிகள் என்னென்னன்னு பார்க்கப்போறோம்
முகத்தில் ஏற்படுற திடீர் மாற்றம். முகத்தோட ஒரு பகுதி திடீரென ஒரு பக்கமா இழுத்துக்கிட்ட மாதிரி இருக்கும். இதை எப்படி check பண்ணலாம்னா, கண்ணாடி முன்னாடி நின்னு நல்லா சிரிக்க try பண்ணுங்க.
அப்படி சிரிக்கும்போது, ஒரு பக்கம் உதடு மட்டும் மேல தூக்காம, கீழ்நோக்கி தொங்குச்சுன்னா... அது stroke-கோட முதல் warning sign
கை அல்லது கால்ல திடீர்னு பலமில்லாம போறது. நல்லாத்தான் இருப்பீங்க, ஆனா திடீர்னு கையில வச்சிருக்க போனோ அல்லது வாட்டர் பாட்டிலோ கை தவறி கீழே விழும்.
ரெண்டு கைகளையும் மேல தூக்க ட்ரை பண்ணும்போது, ஒரு கை மட்டும் தானா கீழே இறங்கும். உடம்போட ஒரு பக்கம் மட்டும் மரத்துப்போன மாதிரி Numbness feel இருக்கும்."
பேச்சு குளறுவது. உங்களால தெளிவா பேச முடியாது, வார்த்தைகள் வாய்ல திக்க ஆரம்பிக்கும். மத்தவங்க சாதாரணமா பேசுறத கூட உங்களால டக்குனு புரிஞ்சுக்க முடியாது.
உங்க friends யாராவது திடீர்னு உளறிப் பேசுற மாதிரி இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க..
life-ல இதுக்கு முன்னாடி அனுபவித்திராத அளவுக்குத் திடீர்னு ஒரு பயங்கரமான, கடுமையான தலைவலி வர்றது.
இதோட சேர்ந்து, ஒரு கண்ணுலயோ இல்ல ரெண்டு கண்ணுலயோ பார்வை திடீர்னு மங்கலாகலாம். அல்லது ஒரு பொருள் ரெண்டா தெரியுற 'Double Vision' ப்ராப்ளமும் வரலாம்."
திடீர்னு தலை சுத்துறதும், உடம்போட balance miss ஆகுறதும். நேரா நடக்க முடியாம ஒரு பக்கமா சாஞ்சு தடுமாறுவாங்க.
இளைஞர்கள் பலரும் இதை சாதாரண tiredness அல்லது மயக்கம்னு நினைச்சு விட்டுடுறாங்க. ஆனா இது மூளைக்கு போற blood supply குறையுறதுக்கான அறிகுறியா இருக்கலாம்.
உடம்புல இந்த அறிகுறிகள்ல எது ஒன்னு தெரிஞ்சாலும், 'நமக்கு வயசு கம்மிதான், நமக்கெல்லாம் stroke வராது'னு அலட்சியமா இருக்காதீங்க. உடனே doctor -a பாருங்க