Air india
Air india

விமான விபத்துக்குப்பின் 4 நாட்களில் 112 விமானிகள் விடுமுறை மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை..!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on: 

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகோல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், விமான விபத்துக்குப்பின் 4 நாட்களில் 112 விமானிகள் விடுமுறை எடுத்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை என்பதையே காரணமாகச் சுட்டிக்காட்டி மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv