திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு பெட்டி பெட்டியாக தங்கம் காணிக்கை வழங்கிய சென்னை பக்தர், ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் பிசினஸ் கொடி கட்டி பறப்பதால் 160 கோடி ரூபாய் மதிப்பிலான 121 கிலோ தங்க திருவாபரணங்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை
Published on: 

சென்னை தொழிலதிபர்

திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு 160 கோடி ரூபாய் மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் காணிக்கையாக இன்று செலுத்தி உள்ளார்.

திருப்பதி வரலாற்றிலேயே ஒரு தனிநபர் இவ்வளவு அதிக அளவிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவது இதுவே முதல்முறை.

முதல்வர் முன்னிலையில்...

திருப்பதியில் இன்று செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் என்பவர், இந்த காணிக்கை தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

நாளை காலை நடைபெறும் அபிஷேகத்துக்குப் பிறகு, இந்த ஆபரணங்களைக் கொண்டு ஏழுமலையான் அலங்கரிக்கப்ப்படுவார் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடரும் காணிக்கை

இதற்கு முன்னரே, திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல்வேறு காணிக்கைகளை இவர் வழங்கியுள்ளார்.

மின்சார பேருந்துகள், ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் மேம்பாட்டிற்காக ரூ.7 கோடி, தேவஸ்தான கோசாலையில் கால்நடைத் தீவனக் கலவை ஆலை அமைப்பதற்காக ரூ.5 கோடி, உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணும் இயந்திரத்திற்காக ரூ.ஒரு கோடி உள்ளிட்ட காணிக்கைகளை இவர் வழங்கி உள்ளார்.

தற்போது, தனது நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை விற்றதன் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் பெற்றதாகவும், அதிலிருந்து 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்க முடிவு செய்து, அதனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

தலை முதல் பாதம் வரை

கிரீடம், சங்கு, சக்கரம், தோள், கை, பாதங்களுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், ஒட்டியாணம் என 45 வகையான ஆபரணங்கள், ஏழுமலையானின் தலை முதல் பாதம் வரை அணிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட்டு உள்ளது.

வீடியோவில் காணலாம்

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை
திருப்பதிக்கு வந்த தங்கம், SILENT ஆக சம்பவம் செய்த தமிழர்
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை
ரூ.160 கோடியில், 121 கிலோ தங்கத்தில் ஜொலிக்கப்போகும் ஏழுமலையான்