

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல் பாஜக வெற்றி பெற்றபோது SIR நடைமுறையில் இருந்ததா? SIR விவகாரம்-ராகுல் காந்திக்கு அமித்ஷா கேள்வி
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றபோது SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையில் இருந்ததா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.