Eaqth quake
Eaqth quake

டாக்கா அருகே 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

கௌஹாத்தி, அகர்தலா, மற்றும் ஷில்லாங் போன்ற வடகிழக்கு நகரங்களிலும் அதிர்வுகள் பதிவாகி இருந்தது தெரிவிக்கப்பட்டது.
Published on: 

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்கத்தாவில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் கொல்கத்தா மற்றும் கூச் பெஹார், தெற்கு மற்றும் வடக்கு தினாஜ்பூர் உட்பட மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்காவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், இதனால் கௌஹாத்தி, அகர்தலா, மற்றும் ஷில்லாங் போன்ற வடகிழக்கு நகரங்களிலும் அதிர்வுகள் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

newstamil.tv