

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், விருந்தினரைப் போல வேடமிட்டு வந்த மர்ம நபர் , 22 அரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் வைத்திருந்த பைகளை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணத்தில் குடும்பத்தினர் டிஜே இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, அருகில் வைக்கப்பட்டிருந்த பைகள் மற்றும் உடைமைகள் இருந்த மேசையை நோக்கிச் சென்ற அந்த நபர், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.