

பறக்கும் மின்சார காரை உருவாக்கியுள்ள இளைஞர் ரவி தம்தா என்ற இளைஞர் உருவாக்கியுள்ள பறக்கும் கார்
உத்தரகாண்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் பறக்கும் மின்சார காரை உருவாக்கியுள்ளார்.
அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்தா என்ற இளைஞர், ஒருவர் மட்டும் பயணிக்கக்கூடிய பறக்கும் மின்சார காரின் முன் மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
முறையான பொறியியல் படிப்பு இல்லாத போதிலும், இணையதளங்கள் வாயிலாக 13 ஆண்டுகள் சுயமாக கற்று இந்த காரை அவர் வடிவமைத்துள்ளார்.