DK Siva kumar
இந்தியா
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கு முற்றும் மோதல்
இருவரின் மோதலை விரும்பாத காங்கிரஸ் மேலிடம் சிவக்குமாரிடம் பேச முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி முற்றி வரும் நிலையில், முதலமைச்சர் சித்தராமையா துணை முதல்வர் சிவகுமாருக்கு காலை உணவு அளித்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்ற போது, இரண்டரை ஆண்டுக்கு பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்பட்டது. இதன்படி, இரண்டரை ஆண்டு முடிவடைந்த நிலையில் முதல்வர் பதவிக்கு சிவகுமார் காய் நகர்த்தி வருகிறார். இருவரின் மோதலை விரும்பாத காங்கிரஸ் மேலிடம் சிவக்குமாரிடம் பேச முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன் பேரில் இந்த விருந்து உபசாரம் நடந்துள்ளது.
