1
1

ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை..

அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களில் குவிந்தனர்.
Published on: 

அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு மையங்களில் குவிந்தனர்.

3,880 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் புனித குகைக்கு செல்லும் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி பால்டால் ((Baltal ))மற்றும் பஹல்காம் வழித்தடங்கள் வழியாகத் தொடங்குகிறது.

இந்நிலையில் ​​யாத்திரைக்கு செல்ல ஏற்கனவே 3.5 லட்சத்திற்கும் மேலானோர் பதிவு செய்துள்ள நிலையில், ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்களுக்கான பதிவு தொடங்கியது.

யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் மாநில அரசால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

newstamil.tv