India AMCA
India AMCA

வான்படை பாதுகாப்பை வலுப்படுத்த AMCA போர் விமானம் நூறு சதவிகிதம் இந்தியாவில் வடிவமைக்கப்படும் விமானம்..!

நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள AMCA எனப்படும் மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமானத்தின் மாடல் உருவாக்கத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
Published on: 

இந்த மாடல் போர் விமானமானது, ADA எனப்படும் விமான வளர்ச்சி முகமையுடன் இணைந்து உருவாக்கப்படும் எனவும் அதில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமான உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டும் ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் இந்த விமானம் உருவாக்கப்படுவதாகவும், விமான புரோட்டோடைப் பணிகள் முடிவடைந்து இயந்திரத்தை பொருத்தும் பணி மட்டுமே பாக்கி உள்ளதாகவும் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

newstamil.tv