

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக நாடு முழுவதும் 103 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை வரும் 22 ஆம் தேதி காணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ரயில்வேயில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24 ஆயிரத்து 470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
அதில் பணிகள் முடிக்கப்பட்ட 13 ரயில் நிலையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.