

அரசு திட்ட தகவல் பலகைகளுக்கு வங்க மொழி கட்டாயம்
மலைப்பகுதிகளில் நேபாள மொழியில் தகவல் பலகைகள்
மேற்கு வங்கத்தில் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான தகவல் பலகைகள் இனி வங்க மொழியில் இடம்பெற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டார்ஜிலிங், கலிம்போங் மலைப்பகுதிகளில் நேபாள மொழியிலும் தகவல் பலகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அரசின் திட்ட விவரங்களை எளிதில் அறிந்துகொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.