காசியில் தேவ தீபாவளி திருவிழா கொண்டாட்டம்

வானில் வர்ணஜாலம் காட்டிய 2,100 ட்ரோன்கள் ஒளிவெள்ளத்தில் கங்கை நதிக்கரை ஜொலித்தது
காசி
காசி
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் தேவ தீபாவளி திருவிழாவை முன்னிட்டு, கங்கை நதிக்கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது. மேலும், 2 ஆயிரத்து 100 டிரோன்கள் மூலம் வானில் வர்ணஜாலமும் நிகழ்த்தப்பட்டது.

கடவுள், இறை மொழிகள் வானில் டிரோன் காட்சிகளாக இடம்பெற்றன. தொடர்ந்து, தசாஷ்வமேத் காட் உள்ளிட்ட இடங்களில் கங்கா ஆரத்தி காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.