Andra ladies free bus
இந்தியா
ஆந்திராவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் தொடக்கம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் தொடங்கி வைத்தனர்..!
ஆந்திரா தலைநகர் அமராவதி அருகே, மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆந்திரா தலைநகர் அமராவதி அருகே, மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தாடேபள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், அந்த இருவரும் பேருந்தில் ஏறி, இலவச பயண டிக்கெட்டுகளை பெண் நடத்துநரிடம் இருந்து பெற்று பெண் பயணிகளிடம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீ சக்தி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மாநிலம் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்.
