Ind news
இந்தியா
சிலிகுரி அருகே மூன்று புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி
இந்த ராணுவ தளங்கள் வெறும் முகாம்களாக மட்டும் இல்லாமல், போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாடு மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமான மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே, மூன்று புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், அண்டை நாடுகளான சீனா மற்றும் வங்கதேசம் அதிர்ச்சி அடைந்துள்ளன. அண்மையில் வங்கதேசம், சிலிகுரிக்கு அருகே இரண்டாம் உலகப் போரின் போது கைவிட்ட விமான தளத்தை சீரமைத்தது. இச்செயல் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்த ராணுவ தளங்கள் வெறும் முகாம்களாக மட்டும் இல்லாமல், போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாடு மையங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
