IND Petrolium
IND Petrolium

4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு

பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி உடனடி திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
Published on: 

கச்சா எண்ணெய் இருப்பு :

இந்தியாவில் 4 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் பொருள்கள் 40 சதவீதம் மட்டுமே எனவும்.

பிற வழிகளில் 60 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவிடமிருந்து முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தியா மேற்கொண்டு வரும் கச்சா எண்ணெய் இறக்குமதியும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

அதோடு,பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி உடனடி திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

newstamil.tv